திமுகவிடம் ஒரு சீட் வாங்கிய ஸ்ரீதர் வாண்டையார் கட்சியில் பிளவு
திருச்சி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார் ஸ்ரீதர் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா பக்கம் இருந்தார் ஸ்ரீதர். தற்போது அவர் திமுக கூட்டணிக்கு வந்துள்ளார். அவருக்கு ஒரு சீட்டைக் கொடுத்துள்ளது திமுக. உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் அவரது கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. இக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையில் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது தன்னிச்சையாக செயல்படும் ஸ்ரீதர் வாண்டையாருக்குக் கணட்னம் தெரிவிக்கப்பட்டது. இன்னும் 2 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சீட் பிரச்சினை காரணமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலும் பிரச்சினை நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications