திமுகவுக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தெரிவிக்கிறது.
இது குறித்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேசுவரன் நிருபர்களிடம் கூறியதாவது,
திமுகவும், தேசியவாத காங்கிரஸும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அந்த அடிப்படையில் இரு கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் உள்ளன. எனவே, வரும் தேர்தலில் திமுகவை ஆதிரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வார்கள். இந்த முடிவை இன்று திமுகவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
தமிழக தேசியவாத காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராகிய நானும் மற்றும் மூத்த தலைவர்களும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications