வாக்காளர் பட்டியல்-17 மாவட்டங்களில் அரவாணிகளே இல்லை!
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 844 அரவாணி வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியல் தெரிவிக்கிறது. இதில், மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் அரவாணிகள் யாரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படவில்லை.
தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ளது படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,59,50,620 பேராகும். இதில் ஆண்கள் 2,30,86,295 பேராகும். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேராகும். ஆண் வாக்காளர்களே தமிழகத்தில் அதிகம் உள்ளனர்.
திருநங்கையர் என அழைக்கப்படும் அரவாணிகளின் எண்ணிக்கை 844 பேர். தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. இதில் 17 மாவட்டங்களில் அரவாணிகள் யாரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படவில்லை.
இந்த தேர்தலில்தான் முதல் முறையாக அரவாணிகள் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவாணி வாக்காளர்கள் யாரும் இல்லாத மாவட்டங்கள் - காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, கோவை, கரூர், அரியலூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி.
தொகுதிகள் கணக்குப்படி பார்த்தால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 145 தொகுதிகளில் அரவாணி வாக்காளர்கள் யாரும் இல்லை.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 292 அரவாணிகள் வாக்காளர்களாக உள்ளனர். தமிழகத்திலேயே இங்குதான் அதிக அளவிலான அரவாணி வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் அரவாணி வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி ஆயிரம் விளக்குதான். இங்கு மொத்தம் 45 அரவாணி வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னையின் பிற தொகுதிகளில் உள்ள அரவாணி வாக்காளர்கள் விவரம்:
துறைமுகம் - 31
கொளத்தூர் - 27
வேளச்சேரி - 26
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- 25
சைதாப்பேட்டை - 25
தியாகராய நகர் - 23
விருகம்பாக்கம் - 20
அண்ணா நகர் - 15
மயிலாப்பூர் - 13
வில்லிவாக்கம் - 12
ராயபுரம் - 9
பெரம்பூர் - 8
எழும்பூர் - 8
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 7
திருவிக நகர் - 3
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications