For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு-முழு பட்டியல் விரைவில்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பாமக போட்டியிடும் 30 தொகுதிகளில் முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு சென்னை வேளச்சேரி, காஞ்சீபுரம், திருப்போரூர், செங்கல்பட்டு, கும்மிடிப் பூண்டி, மதுரவாயல், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார் பேட்டை, போளூர், திண்டிவனம், செஞ்சி, மயிலம், நெய்வேலி, புவனகிரி, பூம்புகார், வேதாரண்யம், பாலக்கோடு, தருமபுரி, மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், பவானி, கோவில்பட்டி, ஆலங்குடி, சோழவந்தான், திண்டுக்கல், பரமத்தி வேலூர், ஜெயங்கொண்டம், பர்கூர் ஆகிய 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி மேட்டூர் தொகுதியில் ஜி.கே.மணியும், ஜெயங்கொண்டம் தொகுதியில் ஜெ.குருவும், நெய்வேலியில் வேல்முருகனும் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
PMK has annouced the candiates for 3 of its 30 constituencies. It is expected that the candidates for the remaining 27 constituencies will be announced today. PMK founder Dr. Ramadoss and VCK leader Thirumavalavan have told that they won't ask for a share in the rule and will support DMK to rule independently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X