அதிமுகவை எதிர்த்து 25 தொகுதிகளில் தனித்துப் போட்டி-கார்த்திக்

அதிமுக அணியில் இடம்பெற்று பின்னர் ஒரு சீட் கூட கிடைக்காமல் அவமானத்துடன் வெளியேறி. நடிகர் கார்த்திக், வெளியே வாருங்கள் தனிக் கூட்டணி அமைக்கலாம் என வைகோவுக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் போன நேரமோ என்னவோ, பின்னாலேயே சிபிஐ, சிபிஎம், தேமுதிக என அத்தனை கூட்டணிக் கட்சிகளும் நிராதரவாக விடப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ந்தவர் கார்த்திக்காக மட்டுமே இருக்க முடியும். எப்படியோ ஒரு கூட்டணி கன்பர்ம்ட் என்று நினைத்த அவர் மீண்டும் வைகோவை குறி வைத்து வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் வைகோ பதிலே அளிக்கவில்லை.
3வது அணி அமையும், அதில் இணையலாம் என்று காத்திருந்த கார்த்திக்கின் ஆசை, நப்பாசையாக போய் விட்டது. 3வது அணிக்கான வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது.
இதையடுத்து அதிமுகவை எதிர்த்து தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் கார்த்திக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 3வது அணி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
அதிமுகவை எதிர்த்து போட்டியிட தற்போது முடிவு செய்துள்ளோம். 26 தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம். அத்தனையும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றார் கார்த்திக்.
நேற்று பேட்டிஅளித்த கார்த்திக், தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட தொகுதிகளையும் அறிவித்து அங்கு தனது கட்சி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். இந்த 25 தொகுதிகளையாவது, நடைமுறையில் இருக்கிற தொகுதிகளாக அவர் செலக்ட் செய்தால் நலமாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications