கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 19ம் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ம் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13
கட்டுப்பாடுகள்:
வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அவை பின்வருமாறு:
- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.
- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications