தமிழகத்தின் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்-சிறிய தொகுதி கீழ்வேளூர்
சென்னை: தொகுதி மறு சீரமைப்பின் கீழ் முதல் சட்டசபைத் தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ளது.
தொகுதி எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே 234 தொகுதிகள்தான். அதேசமயம், பல தொகுதிகள் மாறியுள்ளன, சில புதிதாக சேர்ந்துள்ளன, சில மூடு விழா கண்டுள்ளன.
புதிய தொகுதிகளின் நிலவரப்படி தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உருவெடுத்துள்ளது. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,40,615 ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.
தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதி உருவெடுத்துள்ளது. இங்கு மொத்தம் 1,40,127 வாக்காளர்களே உள்ளனர்.
தமிழகத்தில் அதிக அளவிலான பெரிய தொகுதிகளைக் கொண்டுள்ள மாவட்டங்களாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன. இரு மாவட்டங்களிலும் தலா நான்கு பெரிய தொகுதிகள் உள்ளன.
அதேசமயம் சிறிய தொகுதிகளை அதிகம் கொண்ட மாவட்டங்கள் சென்னை மற்றும் நாகப்பட்டனம். நாகை இந்த மாவட்டத்திற்குட்பட்ட திருவாரூரில்தான் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் கருணாநிதி போட்டியிட்ட சென்னை, சேப்பாக்கம்தான் தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்தது. இந்த முறை நடுத்தர தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய தொகுதிகள் குறித்த ஒரு பார்வை:
பெரிய தொகுதிகள் - வாக்காளர்கள் - மாவட்டம்
சோழிங்கநல்லூர்- 3,40,615 - காஞ்சிபுரம்
கவுண்டம்பாளையம் - 2,89,912 - கோவை
ஆவடி - 2,65,914 - திருவள்ளூர்
பல்லாவரம் - 2,65,703 - காஞ்சிபுரம்
மதுரவாயல் - 2,57,528 - திருவள்ளூர்
மாதவரம் - 2,54,654 - திருவள்ளூர்
முதுகுளத்தூர் - 2,54,552 - ராமநாதபுரம்
அம்பத்தூர் - 2,51,002 - திருவள்ளூர்
செங்கல்பட்டு - 2,40,496 - காஞ்சிபுரம்
தாம்பரம் - 2,38,295 - காஞ்சிபுரம்
சிறிய தொகுதிகள் - வாக்காளர்கள் - மாவட்டம்
கீழ்வேளூர் - 1,40,127 - நாகப்பட்டனம்
துறைமுகம் - 1,45,183 - சென்னை
கந்தர்வக்கோட்டை - 1,48,625 - புதுக்கோட்டை
நாகப்பட்டனம் - 1,49,560- நாகப்பட்டனம்
ராயபுரம் - 1,51,333 - சென்னை
வேதாரண்யம் - 1,54,281 - நாகப்பட்டனம்
கூடலூர் - 1,55,357 - நீலகிரி
விராலிமலை - 1,57,653 - புதுக்கோட்டை
எழும்பூர் - 1,58,945 - சென்னை
திருப்பூர் தெற்கு - 1,59,886 - திருப்பூர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications