பிரச்சாரத்தில் விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக்கை விமர்சிக்க மாட்டேன்!-குஷ்பு
சென்னை: வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளதாகவும், ஆனால் விஜயகாந்த், சரத்குமார் மற்றிம் கார்த்திக் போன்றவர்களை விமர்சித்துப் பேசமாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு திமுகவின் முக்கிய பேச்சாளராக இந்தத் தேர்தலில் களமிறங்க உள்ளார். ஏற்கெனவே அவர் சில மேடைகளில் அதிமுகவை எதிர்த்துப் பேசி வரும் நிலையில், அவரது தேர்தல் பிரச்சாரம் பெரிதாக களைகட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கட்சியின் பேச்சாளர் என்ற முறையில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். ஆனால் எனக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டுதான் இந்தப் பிரச்சாரத்தில் இறங்குகிறேன். முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கிப் பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.
காரணம், அடிப்படையில் நான் திரைப்படத் துறையைச் சேர்ந்தவள் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று கூறியுள்ளார்.
இந்த மூன்று நடிகர்களுடனும் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக தாக்கிப் பேசிவரும் நிலையில், குஷ்பு அதற்கு பதிலடி தருவாரா, அமைதி காப்பாரா? பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications