கட்சிக் கூட்டத்தில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு... இதான் பிஜேபி!- விக்கிலீக்ஸ்
டெல்லி: இந்தியாவின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியின் பேச்சுக்கள் மற்றும் அவர் நடந்து கொண்ட முறையை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக ஆவணங்களில் பகிரப்பட்டிருப்பதை 'தி ஹிந்து' நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது (கேபிள் எண் 48692).
கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்தித்துள்ளார் அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.
அப்போது, 'பிஜேபி ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,' என்று தன்னிடம் அத்வானி கூறியுள்ளார்.
இதனை அதே நாளில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்.
"எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்," என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இரட்டை நாக்கு...
அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை 2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது.
'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, "பாஜகவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேருக்காக வெளியிடப்பட்டது" என்று கேட்டுக்கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பாஜக எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications