செஞ்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு-கொடிக்கம்பங்களை வெட்டி பாமகவினர் ரகளை
செஞ்சி: செஞ்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பாமக வேட்பாளரை எதிர்த்து அங்கு பாமகவினர் கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவுகிறது.
திமுக கூட்டணியில் பாமக 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் செஞ்சியும் ஒன்று. இத்தொகுதியின் வேட்பாளராக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த கணேஷ்குமாரை கட்சி மேலிடம் அறிவித்தது.
இதற்கு செஞ்சி பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். செஞ்சி முழுவதும் பல இடங்களில் பாமக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தனர். பல இடங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி எதிர்ப்பைக் காட்டினர்.
23 பேர் வரை தொகுதியைக் கேட்டு விருப்ப மனு கொடுத்த நிலையில், யாரையும் கண்டு கொள்ளாமல் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்து டாக்டர் ராமதாஸ் பெரும் மோசடி செய்து விட்டார் என்று செஞ்சி பாமகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications