வைகோ தேர்தலைப் புறக்கணிக்கவில்லை, ஜெ.தான் வைகோவை புறக்கணித்துள்ளார்-அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. உண்மையில் ஜெயலலிதாதான், வைகோவை புறக்கணித்து விட்டார் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். உண்மையில் ஜெயலலிதாதான், வைகோவைப் புறக்கணித்து விட்டார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பிரபலமாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றும் என்றார் அழகிரி.
முன்னதாக மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, அழகிரி தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications