திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம்-விஜயகாந்தை எதிர்த்து போட்டியா?!
நடிகர் வடிவேலு இதுவரை எந்த அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாமல் இருந்து வந்தார். ஜெயலலிதாவையும் அவர் பகைத்துக் கொண்டதில்லை. அதேபோல முதல்வர் கருணாநிதியுடனும் அதிகம் ஒட்டிக் கொண்டதில்லை. இரு தரப்புக்கும் பொதுவானவராகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு வந்து அதை அதிமுகவும் ஏற்றுக் கொண்டபோது அதை விமர்சித்துக் கருத்து தெரிவித்தார். தன்னை எம்.ஜி.ஆர் என்று கூறிக் கொள்பவரை ஜெயலலிதா ஏற்கிறாரா என்று அவர் கேட்டிருந்தார்.
வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. அந்த மோதலின்போது, விஜயகாந்த் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று வீராவேசமாக கூறியிருந்தார் வடிவேலு. இருப்பினும் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
ஆனால் தற்போது விஜயகாந்த் இடம் பெற்றுள்ள -அல்லது இடம் பெறப் போகிற அதிமுக கூட்டணிக்கு எதிராக, திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.
இன்று முதல்வர் கருணாநிதியை வடிவேலு திடீரென சந்தித்துப் பேசினார்.
விஜயகாந்தை எதிர்த்து போட்டியா?:
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் வெளியான தேர்தல் அறிக்கையை முதல்வர் கதாநாயகன் என வர்ணித்தார். அந்த அளவு அது சிறப்பாக இருந்தது. வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 108 ஆம்புலன்சு சேவை, இலவச கலர் டி.வி. போன்றவை மக்களை சென்றடைந்தன. அதை விட இரு மடங்கு அதிகமாக அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளன.
முதியோர் பென்ஷனை ரூ.750க்கு உயர்த்தி உள்ளார். 60 வயது ஆனவர்களுக்கு இலவச பஸ் பயணம், ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ.30 ஆயிரமாக உயர்வு, வறுகையில் இருப்பவர்களுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி என ஏராளமான நல்ல திட்டங்கள் உள்ளன. இவை திமுகவுக்கு நிச்சயம் வெற்றி தேடித்தரும்.
வரும் 23ம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன். அன்றும் மறுநாளும் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசுகிறேன். கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.
திமுக அணியில் இடைவேளையும் முடிந்து கிளைமாக்ஸ் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால், அவர்கள் அணியில் இன்னும் சூட்டிங்கே துவங்கவில்லை என்றார்.
கேள்வி: விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவீர்களா?
பதில்: அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை முதலில் அறிவிக்கட்டும் அதன் பிறகு எனது முடிவைச் சொல்கிறேன்.
வடிவேலுவை மத்திய அமைச்சர் அழகிரி தான் திமுகவுக்கு ஆதரவாகத் திருப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications