வட மாவட்டங்களில் எதிர்க்கட்சியினருக்கு தோல்வியே: ராமதாஸ் ஆரூடம்
திருப்போரூர்: காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 வட மாவட்டங்களில் ஒன்றில் கூட எதிர்க்கட்சியினரால் வெற்றி பெற முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,
12 வட மாவட்டங்களில் ஒன்றில் கூட எதிர்க்கட்சியினரால் வெற்றி பெற முடியாது. கிராமத்தில் வசிப்பவர்கள் அந்தந்த ஊர்களி்ல் பணியாற்ற வேண்டும். திமக அரசு அப்படி என்ன செய்துவிட்டது என்று எதிர்கட்சியினர் கேட்கலாம். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கி பசி என்னும் கொடிய நோயைப் போக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்போவதாக முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவற்றை எல்லாம் நாம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் 10 ஓட்டுகள் உள்ளன. நாங்கள் இதுவரை அதிமுகவுக்குத் தான் வாக்களித்தோம். ஆனால் இந்த தடவை திமுகவுக்குத் தான் எங்கள் ஓட்டு என்றார். நம் கூட்டணிக்கு கொத்து கொத்தாய் ஓட்டுகள் விழ வேண்டும். அதற்கேற்றவாறு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு அமைத்து அது அனைத்து வேலைகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். எதிர் அணி இருக்கிறதே என்ற கவலையே வேண்டாம். நம் அணி தான் பலமானது. கருணாநிதி 6வது முறையாக முதல்வராவார் என்று மக்களே சொல்லும் நிலை உள்ளது.
பாமகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதால் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 வட மாவட்டங்களில் ஒன்றில் கூட எதிரணியினர் வெற்றி பெற முடியாது. களப்பணியாளர்கள் 20 பேர் தினமும் மக்களை சந்தித்து பேச வேண்டும். நான் முதன்முறையாக இந்த மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளேன். இத்தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் ஆறுமுகம் குறைந்தது 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்ற பெற பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பத்து பேரும், ராமதாசுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications