புதுச்சேரி: ரங்கசாமியை கைவிட்ட ஜெ-அதிமுக தனித்துப் போட்டி
புதுச்சேரி: தமிழக சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரங்கசாமியும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். ஆனாலும் அவருக்கு கூட்டணியில் ஜெயலலிதா இடம் தரவில்லை. அங்கு யார் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக ஜெயலலிதா-ரங்கசாமி இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.
அத்தனை தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அங்கு என்.ஆர்.காங்கிரஸுடனான உறவு முறிந்து போயுள்ளது.
புதுவை சட்டசபைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல்:
- உப்பளம் - கே.ஏ அன்பழகன்
- நெல்லித்தோப்பு - ஓம் சக்தி சேகர் என்கிற எஸ்.சேகர்
- காரைக்கால் வடக்கு - ஓமலிங்கம்
- முதலியார்ப்பேட்டை - ஏ.பாஸ்கர்
- ஏம்பலம் தனி - பெரியசாமி
- முத்தியால்பேட்டை காசிலிங்கம்
- நிரவி டி.ஆர்.பட்டணம் - செல்வராஜ்
- உழவர் கரை - ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி
- தட்டாஞ்சாவடி - வெங்கடேஸ்வரன்
- மணவெளி - புருஷோத்தமன்
- திருபுவனை தனி - அரசி
- பாகூர் - வெங்கடசாமி
- ஊசுடு தனி - கோவிந்தம்மாள்
- உருளையன்பேட்டை - சுப்ரமணியன்
- மண்ணடிப்பட்டு - மகாதேவி
- லாஸ்பேட்டை - அன்பானந்தம்
- காமராஜ் நகர் - கணேசன்
- நெடுங்காடு தனி - டாக்டர் வசந்தி
- இந்திரா நகர் - குணசேகரன்
- அரியாங்குப்பம் - கலியவரதன்
- காலாப்பட்டு - வெங்கடேசன்
- மங்கலம் - கலியபெருமாள்
- காரைக்கால் தெற்கு - கருப்பையா
- நெட்டப்பாக்கம் - குணச்சக்கரவர்த்தி
- வில்லியனூர் - சேகர்
- திருநள்ளார் - ராமதாஸ்
- கதிர்காமம் - பால்ராஜ்
- ராஜ்பவன் - சரவணக்குமார்
- ஏனாம் - சாய்குமார்
- மாஹே - பக்ருதீன்
கேரள வேட்பாளர் பட்டியல்:
அதே போல கேரள சட்டசபைத் தேர்தலில் 7 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்-
- பாலக்காடு - சம்பத்
- சித்தூர் - ஜெயக்குமார்
- தேவிகுளம் - மல்லிகா
- பீர்மேடு - சுப்புராயல்
- கலமசேரி - சுந்தரமூர்த்தி
- இடுக்கி - லட்சுமணன்
- நெம்மாறா - சுகுணன் என்கிற குணா
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications