மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நேற்று மத்திய அமைச்சரவை வழங்கியது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 38 லட்சம் பென்ஷன்தாரர்கள் பலனடைவார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1500 கோடி கூடுதல் செலவாகும். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த அகவிலைப் படி உயர்வு கணக்கிடப்படும்.
நாட்டில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 45 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக இந்த அகவிலைப்படி உயர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விப் படியையும் 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதவிர சிறப்புப் படியையும் 25 சதவீதம் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பணிமாற்றம் செய்யப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்புப் படியும் 25 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications