'சூப்பர்ஹி்ட் நாயகியால்' திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிப்பு-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது,
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக ஆனால் தான் மக்கள் நலத்திட்ட பயன்கள் மக்களைச் சென்றடையும். அதற்காக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வெற்றித் திருமகள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications