For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ சேவை வரியை ரத்து செய்தது மத்திய அரசு

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவ சேவை வரியை ரத்து செய்வதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 25 படுக்கை வசதிகளுக்கு அதிகமான குளிர் சாதன வசதி செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வரி, சாமானியர்களின் மருத்துவச் செலவை அதிகரிக்கும் என்பதால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தரப்பிலிருந்தும் கோரிக்கை விடப்பட்டது.

இதனை ஏற்று, இந்த வரியை ரத்து செய்வதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

கார்மெண்ட் துறையிலும்...

மேலும் கார்மெண்ட் துறையில், ஆயத்த ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட வரியையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட சில பிராண்டுகளின் ஆடை விலைகள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
There is some relief for the common man as Finance Minister Pranab Mukherjee on Tuesday announced in Parliament the withdrawal of the newly levied service tax on healthcare. Bowing to demand from all quarters, Pranab Mukherjee today rolled back the proposed 5 per cent service tax on air-conditioned hospitals with more than 25 beds and on diagonistic services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X