கூட்டணி டென்ஷனை அடிதடியுடன் 'கொண்டாடிய' தலைவர்!
மதுரை: கூட்டணித் தலைமை கொடுத்த பெரும் டென்ஷனால் ஏகமாக பதறிப் போன முக்கிய கட்சியின் தலைவர், அந்த டென்ஷனை தனது கட்சியின் மூத்த தலைவரிடமும், மச்சானிடமும் கடுமையாக காட்டியதால் கட்சியினர் ஆடிப் போய் விட்டனராம்.
சும்மாவே இந்த தலைவர் கடுமையான டென்ஷனானவர். சாதாரண விஷயத்திற்குக் கூட கடுமையாக கோபப்படுவார். இந்த நிலையில் முதல் முறையாக கூட்டணிக்குள் புகுந்த நேரமோ என்னவோ, கூட்டணியின் ஆரம்பத்திலேயே பெரும் பூகம்பம் வெடித்தது இவரை கடும் பதட்டத்தில் ஆழ்த்தி விட்டதாம்.
அதுவும் டிவியில் கூட்டணித் தலைமையின் வேட்பாளர் பட்டியலை பார்த்ததும் பதறிப் போய் விட்டாராம். கோபம் அதிகமாகியதால் அவர் கடும் பதட்டமடைந்து விட்டாராம்.
உடனே அருகில் இருந்த அந்த பலாப்பழ ஊர்க்காரரை, இந்த வார்த்தைதான் என்று இல்லாமல் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாறுமாறாக திட்டித் தீர்த்து விட்டாராம். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த அத்தனை பெயரையும் கெடுத்து விட்டீர்களே என்று ஒருமையில் திட்டித் தீர்த்தாராம். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் பல நல்ல வார்த்தைகளாம்.
அருகில் இருந்த மச்சான் சமாதானப்படுத்த முயன்றபோது பளாரென ஒரு அறை விட்டு ஓரமாப் போ என்று கத்தி விட்டாராம். இந்த கடும் கோபத்தால் பிளட் பிரஷர் அதிகமாகி டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனராம் குடும்பத்தினர்.
கூட்டணிக்குக் கூட்டிப் போய் தனது பெயரை கெடுத்து விட்டாரே என்ற கோபத்தில்தான் அவர் எளிதாக வென்றிருக்கக் கூடிய தொகுதியைக் கொடுக்காமல், சென்னைக்கு அருகே படு கஷ்டமான தொகுதியைக் கொடுத்து விட்டாராம் தலைவர். மேலும் வேட்பாளர் பட்டியலில் கடைசிப் பெயராகத்தான் அந்த மூத்த தலைவரின் பெயரைப் போட்டும் டென்ஷனாக்கியுள்ளார்.
ஐ.நா. சபைக்கெல்லாம் போய் வந்தவராச்சே அந்தத் தலைவர். மிக மிகப் பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகிய அந்தத் தலைவரை இப்படியெல்லாமா திட்டுவார் இவர் என்று அரசியல் வட்டாரத்தில் பரிதாப கேள்விகள் எழுந்துள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications