ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு, பூந்தமல்லி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு-3 வேட்பாளர்கள் மாற்றம்

காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அதேசமயம், ராமநாதபுரம், பூந்தமல்லி, திருப்பூர் தெற்கு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.
அதன்படி ராமநாதபுரம் தொகுதியில், கே.என்.அசன் அலி, பூந்தமல்லி தொகுதியில் காஞ்சி ஜி.வி.மதியழகன், திருப்பூர் தெற்கு தொகுதியில் கே.செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வேட்பாளர்கள் மாற்றம்
இந்த நிலையில் தொண்டர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் மாற்றியுள்ளது.
குளச்சல் தொகுதியில் முன்பு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜான் ஜேக்கப்புக்குப் பதில் ஜே.ஜி. பிரின்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணியில் அறிவிக்கப்பட்டிருந்த சதாசிவலிங்கத்திற்குப் பதில் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் ஹசீனா சயத்துக்குப் பதில் மக்பூல் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயந்தி தங்கபாலு மாற்றமில்லை!
அதேசமயம் மயிலாப்பூர் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலு, மணப்பாறை, விளவங்கோடு, முசிறி, திரு.வி.க. நகர், கிள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸாரின் அதிருப்தியைப் பெற்றுள்ள வேட்பாளர்கள் மாற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications