சபாநாயகருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: 24 மணி நேர அவகாசம்

Subscribe to Oneindia Tamil

அம்பாசமுத்திரம்: தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திமுக வேட்பாளரும், சபாநாயகருமான ஆவுடையப்பனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் சபாநாயகர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் அம்பாசமுத்திரத்தின் தேர்தல் அலுவலர் சு.கருணாகரனிடம் தாக்கல் செய்தார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி கலந்து கொண்டனர் என்ற புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு வந்த திருநெல்வேலி எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் தேர்தல் விதியை மீறியதற்காக 106 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே தேர்தல் விதிமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திமுக வேட்பாளரும், சபாநாயகருமான ஆவுடையப்பனுக்கு நேற்று(24-3-2011) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+