For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.5 லட்சம் விலையில் புதிய அக்செண்ட்:ஹூண்டாய் அறிமுகம்

Google Oneindia Tamil News

Hyundai Accent
சென்னை: ரூ.5 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அக்சென்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

குரோமிய பூச்சு கொண்ட முன்பக்க கிரில், நம்பர் பிளேட் ஆகியவை அக்சென்ட்டின் அழகுக்கு மெருகூட்டுகிறது. வெளிப்புற வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், அக்சென்ட் ஸ்டைல் மேம்பட்டு இருக்கிறது.

தவிர, உள்புறங்களில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் இன்டிரியர் வடிவமைப்பு மனதை மயக்குகிறது.

ஸ்டீயரிங் வீல் லெதர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. இது காரை ஓட்டும்போது அதிக கிரிப் மற்றும் கைகளுக்கு சொகுசையும் கொடுக்கும்.

பவர் விண்டோ உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த அக்சென்ட் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மாடல்களில் வந்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் கூறுகையில்,"புதிய அக்சென்ட் வாடிக்கையாளர் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும்," என்றார்.

டெல்லியில் ரூ.5.02 எக்ஸ்ஷோரூம் விலையில் அக்சென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்திலும் சிறப்பாக இருக்கும் என ஹூண்டாய் உறுதி தெரிவிக்கிறது.

English summary
Hyundai Motor India rolled-out its fresh 2011 edition of Hyundai Accent. The new Accent from Hyundai comes with a price tag of Rs501,900 (Ex-Showroom, New Delhi).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X