For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு ரூ. 4.5 கோடி சொத்து

Google Oneindia Tamil News

Jayanthi Thangabalu
சென்னை: மயிலாப்பூர் தொகுதியல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தனக்கு ரூ.4.5 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசைய சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

தங்கபாலுவின் மனைவியான ஜெயந்தி, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதை எதிர்த்து தொகுதி முழுவதும் காங்கிரஸார் கடும் கோபத்துடன் உள்ளனர். தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயந்தி.

வேட்பு மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது...

46 வயதான ஜெயந்தி, எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ளார். திரைப்பட எடிட்டிங்கில் டிப்ளமோவும் படித்துள்ளார்.

ஜெயந்தியின் மொத்த அசையும் மற்றும் அசைய சொத்துக்களின் மதிப்பு ரூ. .4.5 கோடியாகும்.

ரூ. 1.67 கோடி அளவுக்கு கடன் வைத்துள்ளார்.

ஜெயந்தியின் வருட வருமானம் ரூ. 40.25 லட்சமாகும். கணவர் தங்கபாலுவின் வருட வருமானம் ரூ. 45.39 லட்சமாகும்.

மார்க்கெட் நிலவரப்படி ரூ. 1.71 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை - வீட்டு மனை, நிலம் உள்பட - வைத்துள்ளார் ஜெயந்தி.

ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 2 கார்களை ஜெயந்தி வைத்துள்ளார். ரூ. 17.96 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் அவர் வைத்துள்ளார்.

இவருக்கு எதிராக எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை.

English summary
Mylaopre Congress candidate Jayanthi Thangabalu, is a crorepati as she owns around Rs 4.5 crore worth movable and immovable assets. She has loans and liabilities to the tune of Rs 1.67 crore, according to the affidavit submitted alongwith her nomination papers. Jayanthi's annual income according to the latest Income-Tax returns were Rs 40.25 lakh while that of her husband was Rs 45.39 lakh. She owns immovable assets including housing plot and land worth Rs 1.71 crore valued according to the current market value. She owns two cars valued at a little over Rs 15 lakh and has gold and silver jewels worth Rs 17.96 lakh, the affidavit said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X