போட்டி வேட்பு மனு தாக்கல்-விளவங்கோடு சிபிஎம் எம்.எல்.ஏ. டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: போட்டி வேட்பு மனு தாக்கல் செய்த விளவங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளராக லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த விளவங்கோடு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட தீர்மானித்தார்.
அதன்படி அவர் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது ஜோசப்பைகட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications