பணப்பட்டுவாடா விவகாரம் - 108 ஆம்புலன்ஸை சோதிக்க வேண்டும் - பா.ஜ.க. கோரிக்கை !
மதுரை: திமுகவின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க, 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளை தேர்தல் அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பிஜேபி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வாகன சோதனை செய்து பொது மக்களையும் வியாபாரிகளையும் அவதிக்குள்ளாக்குவதாக அறிக்கை விடுத்துள்ளார்.
பொது மக்களும் வியாபாரிகளும் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணம் கேட்டு அதிகாரிகள் அவர்களை துன்புறுத்த வேண்டாம் என பாரதீய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.
கருணாநிதியும் ஆளும் கட்சியும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களுக்கான ஒருசில அதிகாரிகள் துணையோடு பண பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் பரவியுளளது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே அரசின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்ட மின்வெட்டை பயன்படுத்தியும், மேலும் வேண்டும் என்றே மின்வெட்டை ஏற்படுத்தியும் இருளில் தமிழகம் மூழ்கியுள்ள நேரத்தில் வாக்குகளை கவர பணமும், இலவச பொருட்களும் கடத்தப்படுகிறது.
எனவே தேர்தல் கமிஷன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை முழுவதுமாக சோதிக்க வேண்டும் என்றும், மின்வெட்டை உடனடியாக தேர்தல் முடியும் வரையாவது நீக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications