ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட இரு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வேட்பு மனு செய்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் பலர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், தங்கபாலு ஆதரவாளர் சுடலையாண்டி மற்றும் இளங்கோவன் ஆதரவாளர் ராணி வெங்கடேசன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மீண்டும் போட்டியிடுவார் என, கட்சி தலைமை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராணி வெங்கடேசன் ஆதரவாளர்கள், சுடலையாண்டியை மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று சுடலையாண்டி எம்.எல்.ஏ. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிறுது நேரத்தில் , ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ. வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராணி வெங்கடேசன் தற்போது சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் இத் தொகுதி நீக்கப்பட்டு அதில் இருந்த சில பகுதிகள் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே தொகுதியில் போட்டியிட இரு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வேட்பு மனு செய்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+