இடமாற்றம் செய்யப்பட்ட ஜாங்கிட் போலீஸ் பயிற்சிப் பள்ளி ஏடிஜிபியாக மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் தரப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் கமிஷனராக இருந்த ஜாங்கிட் திருவள்ளூர் மத்திய போலீஸ் தேர்வு பள்ளி ஏ.டி.ஜி.பி.,யாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு டி.ஐ.ஜி., யாக ஜான் நிக்கல்சனும், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி., யாக பாலசுப்ரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக நீதி - மனித உரிமை பிரிவு டி.ஐ.ஜி.,யாக பாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறபித்துள்ளது.
இவர்கள் அனைவரும் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications