சட்டசபையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வுக்கு ஒய்.எஸ்.ஆர். தம்பி பளார்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டசபையில் அமைச்சர் ஒருவர் எம்.எல்.ஏ.வை தாக்கியுள்ளார்.
ஆந்திர சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ஒருவர் பேசுகையில், ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டார். அவர் ஒரு திருடன் என்று கடுமையாக விமர்சித்தார்.
உடனே அங்கிருந்த ராஜசேகர ரெட்டியின் அமைச்சர் தம்பியான விவேகானந்த ரெட்டி ஆத்திரம் தாங்காமல் தன் அண்ணனை திருடன் என்று கூறியவரை ஓங்கி கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications