தென்மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கே வெற்றி: மு.க. அழகிரி
தூத்துக்குடி: வரும் சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான அழகிரி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கீதா ஜீவன் 35 ஆயிரத்துக்கும அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.












Click it and Unblock the Notifications