சுயேச்சைகளுக்கு முரசு, மெழுகுவர்த்தி சின்னங்கள்: தேர்தல் அதிகாரி அமுதா விளக்கம்
சென்னை: தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாத இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு முரசு, மெழுகுவர்த்தி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சின்னத்தில் ஒருவர் தான் போட்டியிடலாம் என்று தேர்தல் விதி சொல்லவில்லை என்று தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா தெரிவித்தார்.
வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 773 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நேற்று சென்னை பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக்ததில் வேட்பாளர்கள் பட்டியலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் சரிபார்க்கப்பட்டன. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொட்டும் முரசு சின்னமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி்க்கு கொடுக்கப்பட்டுள்ள மெழுவர்த்தி சின்னமும் அவ்விரு கட்சிகள் போட்டியிடாத இடங்களில் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா கூறியதாவது,
ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீத தொகுதியில் போட்டியிடுபவர்களுக்குதான் பொது சின்னம் கொடுக்க முடியும். உதாரணமாக தேமுதிக பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். அதற்கு கொட்டும் முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேமுதிக போட்டியிடாத இடங்களில் கட்சி வேட்பாளரோ அல்லது சுயேட்சையோ முரசு சின்னத்தை கேட்டால் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அந்த சின்னம் கொடுக்கப்படும்.
அதேசமயம் பதிவு செய்யப்படாத இரு கட்சிகள் அல்லது சுயேச்சைகள் ஒரே சின்னத்தை கேட்டார்கள் என்றால் உதாரணமாக மெழுகுவர்த்தி சின்னம் கேட்டால், 2 வேட்பாளர்களின் பெயர்களையும் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும்.
தேமுதிகவுக்கு முரசு சின்னம் கொடுத்துள்ளதால் வேறு தொகுதியில் போட்டியிடும் யாருக்கும் அந்த சின்னம் கொடுக்கக்கூடாது என்று தேர்தல் விதி சொல்லவில்லை. அவர்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். இப்படித் தான் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications