மும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது
மும்பை: மும்பையில் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவி்த்து அவரது உருவப் படத்தை எரி்த்த நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியைக் காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இன்று திருப்பதியில் இருந்து அவர் மும்பை செல்கிறார்.
இந்த நிலையில் 500 இந்திய, தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மும்பை நாம் தமிழர் கட்சியினர் இன்று பெரிய அளவிளான போராட்டத்தை நடத்த தயாராகி வந்தனர். அதற்கு முன்பாக மும்பை தாராவி பகுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை எரித்தனர்.
இதனால் மும்பை நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராசேந்திரன், சேலம் செல்லதுரை மற்றும் விழித்தெழு இயக்கத்தைச் சேர்ந்த சிரிதர் ஆகியோர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கைது செயப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போர்குற்றவாளி ராஜபக்சேவை அணைத்து வழிகளிலும் தொடர்ந்து காப்பாற்றிவரும் இந்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கையே இந்த கைது நடவடிக்கை என்று கருதப்படுகிறது. மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications