சென்னையில் 5ம் தேதி கருணாநிதியுடன் சோனியா பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகவும் திமுக கூட்டணிக்காகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சோனியா பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது.
அதேபோல பாஜக தரப்பில் அத்வானியோ அல்லது முக்கிய தலைவர்களோ தமிழகம் பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சுஷ்மா சுவராஜ் மட்டுமே வந்து சென்றனர். அவரது பிரச்சாரமும் தமிழக வாக்காளர்களிடம் எடுபடவில்லை.
இந் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய சோனியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி சென்னை வரும் அவர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் கருணாநிதியும் இக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கருணாநிதி இன்று வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். நாளை ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள் வட சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி தென் சென்னை தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் தென் சென்னையில் சோனியாவுடன் ஒரே மேடையில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications