அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபையின் 62 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 62 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மிக பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மொத்தம் 485 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 85,09,011 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்ட பிரபலங்கள் களத்தில் உள்ளனர்.
2வது கட்ட வாக்குப் பதிவு 64 தொகுதிகளில் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும்.











Click it and Unblock the Notifications