கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக முதல்வரின் நிழல்போல் அவர் செல்லும் இடமெல்லாம், உடன் செல்பவர் சண்முகநாதன். முதல்வரின் செயலாளராக பணியாற்றினார். முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவர் இருக்கைக்கு பின் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார் சண்முகநாதன்.
இந்நிலையில் முதல்வர் சுற்றுப்பயணம் செல்லும்போதோ, பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும்போதோ கெசட்டட் அதிகாரிகள் யாரும் உடன் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து முதல்வருடன் இருப்பதற்கு இடையூறாய் இருந்த செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் சண்முகநாதன்.












Click it and Unblock the Notifications