ராகுல் காந்தி முன்னிலையில் தங்கபாலுவை எதிர்த்து கடும் சண்டை
ஈரோடு: ஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரது முன்னிலையில் தங்கபாலுவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் ராகுல் காந்தி ஷாக் ஆனார்.
ஈரோடு மாவட்ட திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வேளாளர் என்ஜீனியரிங் கல்லூரியில் பிரசாரக் கூட்டம் நடந்தது. அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தங்கபாலு பேச வந்தார்.இதையடுத்து கட்சியினர் பெரும் திரளாக எழுந்து தங்கபாலுவே பேசாதே என்று கத்தி கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி அதிர்ச்சி கலந்த முகத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனால் பேச ஆரம்பித்த தங்கபாலு சற்று நேரத்தில் பேச்சை நிறுத்தி விட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் உள்ளனர். பெரும் குழப்பத்திற்குப் பின்னர் மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலுவே வேட்பாளராக அதிரடியாக மாறியதைத் தொடர்ந்து தங்கபாலு மீதான எதிர்ப்பலை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி முன்னிலையில் தங்கபாலுவுக்கு நோஸ் கட் கொடுக்கப்பட்டதால் தங்கபாலு தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications