சட்டசபை தேர்தல்: டாஸ்மாக் கடைகளை 5 நாள் மூட தேர்தல் ஆணையம் தி்ட்டம்
புளியங்குடி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டாஸ்மாக் கடைகளை தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களைப் போல் 5 நாட்கள் மூடலாமா என தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் கருத்து கேட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து கடை மேற்பார்வையாளர்களின் கருத்தரிய மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மக் அலுவலகங்களில் இன்று அவரச கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 13-ம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வழக்கம் போல் டாஸ்மாக் நிர்வாகம் வரும் 11-ம் தேதி மாலை 5 மணி முதல் தேர்தல் நாளான 13-ம் தேதி மாலை வரை மாநிலம் முழுவதும் உள்ள 6200 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மதுகடைகளுக்கு 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்கூட்டியே வரும் 8-ம் தேதி முதல் டாஸ்மக் கடைகளை அடைக்கலாமா, அதனால் முன்கூட்டியே அதிகரிக்கும் மதுவிற்பனைக்கு ஏற்றப்போல் சரக்கு இருப்பு உள்ளதா, இதனால் ஏற்படும் பாதகஙகள் என்னென்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளது.
இதையடுத்து இன்று(6ம் தேதி) மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் மேலாளர் தலைமையில் கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்தின் அடிப்படையில் மாவட்ட, மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அளிப்பார்கள். அதைப் வைத்து தான் வரும் 8-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா, அல்லது 11-ம் தேதி முதல் மூடப்படுமா என்பது குறித்து மாநிலம் நிர்வாகம் முடிவெடுக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications