சென்னையில் பாஜக செய்தித் தொடர்பாளருடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி
சென்னை: பாஜகவின் நண்பர்கள் அமைப்பின் (http://friendsofbjp.com/) சென்னை பிரிவு சார்பில் சென்னையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் இன்றைய நிலை என்ற தலைப்பிலான இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார். அவருடன் பார்வையாளர்கள் உரையாடலாம்.
ஏப்ரல் 9ம் தேதி மாலை 4 மணிக்கு கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எம்விஜே டவர்ஸில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு பாஜக நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரண்ட்ஸ் ஆப் பாஜக எனப்படும் பாஜகவின் நண்பர்கள் அமைப்பு, தேசிய அளவிலான இயக்கமாகும். இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களை உள்ளடக்கிய அமைப்பு இது. அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். பாஜகவின் ஒரு துணை அமைப்பான இந்த இயக்கம், சிறந்த கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. தனி மனித சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications