முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 30தான் ஆகிறது.
அவரது பெயர் தீபக். 30 வயதாகும் தீபக், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜிம்மில் நேற்று திடீரென மரணமடைந்தார். இவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். டிடிகே சாலையில் உள்ல ஜிம்முக்கு அவர் உடற்பயிற்சி செய்ய வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினாராம்.
இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அவரை ஜிம் பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் ஏதும் வராததால் வழக்குப் போடவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் கருதினால் நாங்கள் விசாரணை நடத்துவோம். அது இயற்கையான மரணமாக இருந்தால் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ராசாவின் நண்பரான சாதிக்பாட்சா மர்மமான முறையி்ல மரணமடைந்தார். இந்த நிலையில் ராசாவின்உறவினர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications