தேர்தல் ஆணையம் குறித்த விமர்சனம்-கருணாநிதிக்கு பாஜக கண்டனம்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து விமர்சித்து முதல்வர் கருணாநிதி பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.
இதற்காக திமுகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
இதுகுறித்து பாஜக அகில இந்திய செயலாளர் முரளிதர் ராவ் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் முதல்வர் கருணாநிதி. எனவே கருணாநிதிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கைக்கு திமுக முற்றிலும் பொருத்தமானதாகும். காரணம், தேர்தல் ஆணையத்தின் அடிப்படையையே அது சந்தேகப்படுகிறது, கடுமையாக விமர்சித்து வருகிறது.
அதேபோல கருணாநிதி பேசுவதைக் கேட்டுக் கொண்டு காங்கிரஸ் அமைதி காக்கிறது. இதன் மூலம் கருணாநிதியின் பேச்சை அது ஆமோதிப்பதாக அர்த்தமாகிறது என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications