ஜெயலலிதாவுக்கு காமெடி ஜோடி சேர்ந்துள்ளது-ஸ்டாலின் தாக்கு
சென்னை: ஜெயலலிதாவுடன் ஒருவர் ஜோடி சேர்ந்துள்ளார். அவர் ஹீரோவாக இருந்து இப்போது காமெடியனாக மாறியவர். நல்லவேளை இப்போது ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது அவர் நாயகனாக நடிக்கவில்லை என்று விஜயகாந்த்தை தாக்கியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் இன்று தென் சென்னையில் பிரச்சாரம் செய்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஜெ. அன்பழகன், மயிலாப்பூரில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோரை ஆதரித்து அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதாவுடன் புதிதாக ஒருவர் ஜோடி சேர்ந்துள்ளார். அவர் கதாநாயகனாக இருந்து வில்லனாக மாறி இப்போது காமெடியன் ஆகிவிட்டார். நல்லவேளை ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தபோது இவர் இல்லை. இப்போது வடிவேலுதான் ஹீரோவாக உள்ளார்.
ஏதோ தேர்தல் நேரத்திற்காக வருபவர்கள் நாங்கள் அல்ல. எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களுக்கு தொண்டு செய்து உங்களை தேடி பணிபுரிபவர்கள் நாங்கள்.
ஜெயலலிதாவை போல தேர்தல் நேரத்தில் மட்டும் வாய்க்கு வந்தவாறு பேசுகிறவர் நாங்கள் அல்ல. அவர் சென்னைக்கு மட்டும்தான் விமானத்தில் பிரசாரம் செய்ய வரவில்லை. தேர்தல் வந்தால்தான் தமிழ்நாட்டை பற்றி அவருக்கு ஞாபகம் வரும். மற்ற நேரத்தில் கொட நாடுதான் தெரியும்.
வானத்தை கிழிப்போம் வைகுண்டத்தை காட்டுவோம் என்று இப்போது கூறுகிறார். ஆனால் கலைஞர் சொன்னதை செய்து காட்டியவர், செய்யக்கூடியவர். 2006 ம் ஆண்டு கலைஞர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். அதே போல இப்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் செய்து கொடுப்பார் என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications