தேர்தல் போலீஸ் சோதனையில் ரூ.2.23 கோடி சிக்கியது-ஒரு திமுக தொண்டர் கைது
சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடந்த வரும் வாகன சோதனையில், நேற்று சென்னையில் இரண்டு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.23 கோடி பணம் சிக்கியது. இதில் திருவான்மியூரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக ஒரு திமுக தொண்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆவடி அருகே பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார், ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.2.20 கோடி பணம் கட்டுக் கட்டாக ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து பறிமுதல் செய்தனர்.
அந்த வேனை ஓட்டி வந்த நபரின் பெயர் ராஜேஷ் குமார். அவருடன் சத்யராஜ் என்பவரும் உடன் இருந்தார். இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அசோக் நகரைச் சேர்ந்த ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் தாங்கள் பணியாற்றி வருவதாகவும், இந்தப் பணத்தை பல்வேறு ஏடிஎம் மையங்களில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும் இப்பணத்தை அம்பத்தூர் எஸ்ட்டேட்டில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால் பணத்தை எடுத்ததற்கான எந்தஆதாரமும் அவர்களிடம் இல்லை. மேலும் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியபோதிலும் வேனில் எந்த செக்யூரிட்டி காவலரும் உடன் இல்லை. மேலும் வேனில் இருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி லைசென்ஸும் இல்லை.
இதையடுத்து அந்தப் பணத்தை அப்படியே பறிமுதல் செய்தனர் போலீஸார். உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் ஆவடி போலீஸாரும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே திருவான்மியூரில் நடந்த இன்னொரு சோதனையில், திமுகவைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் பிடிபட்டார். இவர் ரூ. 3 லட்சத்துடன் எல்பி சாலையில் உள்ள வங்கிக்கு வந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் வைத்திருந்த ஆயிரும் ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு 100 ரூபாய்க் கட்டுக்களை வாங்க வந்திருந்ததாக கூறினார்.
அவர் வைத்திருந்த பணக் கட்டுகளுடன் சோழிங்கநல்லூர் தொகுதிக்கான துண்டுப் பிரசுரங்களும் உடன் இருந்தன. அவர் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்தப் பணத்தை மாற்ற வந்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், புருஷோத்தமனைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications