அந்தோணி ஒரு கும்பகர்ணன்: கேரள முதல்வர் அச்சுதானந்தன் தாக்கு
ஆலப்புழா: தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்தார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று விமர்சித்துள்ளார். நேற்று முன்தினம் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி என்றார்.
கடந்த 5 ஆண்டு காலமாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது தூங்குவதுபோல நடித்தாரா என்று தெரியவில்லை. தற்போது திடீர் என்று விழித்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் என்று அந்தோணி தெரிவித்திருந்தார்.
இதற்கு அச்சுதானந்தன்(87) கொடுத்த பதிலடி,
நான் ஒன்றும் தூங்கவில்லை. அந்தோணி தான் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறார். தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது கூட தூங்கிக் கொண்டிருந்தார். கேரளாவில் உள்ள மாராடு கிராமத்தில் சாதிப் படுகொலைகள் நடந்தபோது அப்போதைய முதல்வர் அந்தோணி தூங்கத் தான் செய்தார். லோக்பால் மசோதா குழுவில் அந்தோணி ஏன் சேர்க்கப்படவில்லை என்றார்.
இதற்கிடையே ராகுல் காந்தியை அமுல் பேபி என்று விமர்சித்துள்ளது அநாகரீகமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications