ராமநாதபுரம் அருகே வீட்டுக் கூரையில் பணம்: கவுன்சிலர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாக்காளர்கள் பணம் வாங்க மறுத்தால் வீட்டு கூரையில் செருகி சென்றதாக கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிவெட்டிவலசை, வன்னிக்குடி, குத்துக்கல் வலசை போன்ற கிராமங்களில் நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பன்னிவெட்டிவலசை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பணம் கொடுத்து வாக்கு கேட்டபோது சிலர் பணம் வாங்க மறுத்துள்ளனர்.
பணத்தை கொடுத்தே தீருவோம் என்றிருந்தவர்கள் வாங்க மறுத்தவர்களின் வீட்டுக் கூரைகளில் பணக் கட்டை செருகிவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்தபோது வீட்டுக் கூரையில் பணக் கட்டைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது யாருடைய வேலை என்பதை யூகித்துக் கொண்டனர்.
உடனே இது குறி்த்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். பறக்கும்படையினர் உடனே அந்த கிராமத்திற்கு வந்து வீடு வீடாகச் சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த நாகசாமி, லட்சுமி, கனகாம்பாள், சாந்தி ஆகியோர் திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், முருகேசன், தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் ஓட்டுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வழங்கியதாகவும், அதனை வாங்க மறுத்ததால் நள்ளிரவில் வீட்டு கூரையில் பணத்தை செருகி விட்டு சென்றதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த 4 பேரின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1,100 ரொக்கத்தை கைப்பற்றினர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அளித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியன், முருகேசன், தியாகராஜன் ஆகியோரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மதுரையில் தபால் கவர்களில் பணம் வைத்து வீச்சு
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு தபால் கவர் கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது ஒவ்வொரு கவரிலும் ரூ. 250 இருந்தது. இந்த விஷயம் அப்பகுதி முழுவதும் பரவியது. அப்போது தான் பலர் வீட்டு முன்பும் இதேபோன்று தபால் கவரில் பணம் கிடந்தது தெரிய வந்தது.
மதுரையில் தீவிர கண்காணிப்பையும் மீறி திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக ஏற்கனவே பல புகார்கள் வந்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தி்ன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டிக்கர் பொட்டு அட்டையில் திமுக பணப் பட்டுவாடா
மடத்துக்குளம் தொகுதியில் திமுகவினர் வீடு, வீடாக ஸ்டிக்கர் பொட்டு அட்டையில் ரூ. 500 வைத்து வினியோகித்ததாக தேர்தல் பார்வையாளரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதியில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் மெட்ராத்தி ராமேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூதன முறையில் பணம் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
ராமேகவுண்டன்புதூர் கிராமத்தில் வீடு, வீடாக திமுக சின்னம் மற்றும் தலைவர்கள் படம் உள்ள ஸ்டிக்கர் பொட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகளுக்குள் ரூ. 500 வைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதை அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும், தாங்கள் பறிமுதல் செய்து வந்த 50-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளை அதிமுகவினர் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்தனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications