தமிழகத்தில் 75.21 சதவீத வாக்குப் பதிவு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள், வெட்டுக் குத்து போன்றவை இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது தேர்தல்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொருகிறது. ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 65வது எண் வாக்குச்சாவடியும் இதில் ஒன்று.
பல வாக்குச் சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி தமிழகத்தில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். 4 மணி நிலவரப்படி 59 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாலை 5 மணிக்கு முன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. அவர்கள் வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டோக்கன் வாங்கிய ஏராளமான வாக்காளர்கள் 6 மணிக்கு மேலும் வாக்களித்தனர்.
இந்த நிலையில் மாலை ஆறரை மணியளவில் டெல்லியில் பேட்டி அளித்த தேர்தல் ஆணைய அதிகாரி, தமிழகத்தில் தோராயமாக 75.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் இன்னும் வாக்குப் பதிவு நடந்து வருவதால் இந்த எண்ணிக்கை உயரும் என்றார்.
2 மணி நிலவரப்படி தர்மபுரியில் அதிகபட்சமாக 56 சதவீத வாக்குகளும், கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில், 71.84 சதவீத வாக்குகள் தமிழகத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கதுகாஞ்சிபுரத்தில் மிகக் குறைந்த அளவாக 36 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
முன்னதாக, மாநிலம் முழுவதும் மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.
முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.
காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
ஸ்ரீரங்கத்தில் 1 மணி வரை 45 சதவிதம் வாக்குப்பதிவு:
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் பகல் 1 மணி வரை 42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாநிலம் முழுவதுக்குமான சரியான வாக்குப் பதிவு விவரத்தை இன்றிரவு தேர்தல் ஆணையம் வெளியிடும்.
பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications