சித்திரை மாதப் பிறப்பு-ஜெயலலிதா, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சித்திரை மாதப் பிறப்பையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
சர்வாதிகார குடும்ப ஆட்சியைத் தகர்த்தெறிந்து புதிய வளர்ச்சியையும் மலர்ச்சியையும் விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.
மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இனிமையும் இன்பமும் செழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த சித்திரைத் திங்கள் முதல் இதுகாறும் தமிழகத்தில் நிகழ்ந்த எண்ணற்ற நல்லவை மேன்மேலும் தொடர்ந்து மக்களின் அமைதி, நிம்மதியான வாழ்வு சிறந்திடவும், சாதி, மத பேதமின்றி அனைவரிடையேயும் நல்லிணக்கம் மேம்படவும் நாட்டில் வன்முறை ஒழிந்து ஒற்றுமை, ஒருமைப்பாடு உயர்ந்திடவும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில்,
அனைத்து தீய செயல்களுக்கும் விடை கொடுத்து தமிழன் உரிமைகள் அனைத்தும் காக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்றிலே நிலை நிற்க வழிகாட்டும் என்று நம்பி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications