அசாருதீன் மகனுடன் ஜுவாலா கட்டாவுக்குக் காதலா?

டெல்லியில் நடந்த காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியி்ல் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.
ஜுவாலாவிடம் கேட்டதற்கு இந்திய பேட்மிண்டன் அசோசியேஷனைச் சேர்ந்த யாரோ தான் தனது பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதாக கூறினார்.
அதன் பிறகு ஜுவாலா பற்றிய செய்திகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் பரபரப்புச் செய்தியாகிவிட்டார் ஜுவாலா. காரணம் அசாருடனான காதல் இல்லை மாறாக அவர் மகன் அசாதுத்தீனுடன் காதலாம். ஜுவாலா எங்கு சென்றாலும் அசாதுத்தீன் இல்லாமல் கிளம்புவதில்லையாம்.
ஹைதராபாத்தில் ஜுவாலா விளையாடுகிறார் என்றால் முதல் ஆளாக அசாதுத்தீன் ஆஜராகிவிடுகிறாராம். விளையாடி முடித்தவுடன் ஜுவாலா நேராக அசாதுத்தீன் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறாராம்.
என்ன ஜுவாலா இது முன்பு அசாருதீன், தற்போது அவரது மகனா என்று கேட்டால், நடிகைகள் பாணியில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிறார். அசாதுத்தீன் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு வீரர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெரிய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலம் ஆகும் முன்பே அவர் சர்ச்சையில் சிக்காமல் ஜுவாலா காப்பாற்றி வருகிறார்.
இது குறி்த்து இந்திய பேட்மிண்டன் அசோசியேஷனைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அவர் அசாருதீனுடன் சுற்றுகிறார் என்று தெரியும். ஆனால் தற்போது அவரது மகனுடன் என்றால் எனக்கு தெரியவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications