பினாயக் சென் மீதான தேசதுரோக புகார் ரத்து-ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

தேச துரோக புகாரைச் சுமத்தியும், நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி சட்டிஸ்கர் கோர்ட்டில் பினாயக் சென் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராய்ப்பூர் கோர்ட், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று சென் மற்றும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டையும் அது உறுதிப்படுத்தியது.
இதற்கு நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்தது.
தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். மேலும் ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தார்.அதை கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டு பொருந்ததாது. நக்சலைட் தொடர்பான இலக்கிய நூலை வைத்திருந்தார் என்பதற்காக அவரை நக்சலைட் தொடர்பானவர் என்று கூறி விட முடியாது. மகாத்மா காந்தி சுயசரிதத்தை ஒருவர் வைத்திருந்தால் உடனே அவரை காந்தியவாதி என்று கூறி விட முடியுமா.
எனவே அவர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது. பினாயக் சென் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படலாம் என்றும் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications