தேர்தல்: கருணாநிதி, ஜெ. தொகுதிகள் வாக்குப்பதிவு இறுதி விவரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் இறுதி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனும் உள்பட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருவாரூர் தொகுதி வாக்குகள் விவரம்:
மொத்த வாக்காளர்கள் - 2,09,337
பதிவான மொத்த ஓட்டு - 1,71,927
ஆண்கள் - 83,292
பெண்கள் - 88,633
திருநங்கைகள் - 2
சதவீதம் - 82.13
ஸ்ரீரங்கம் வாக்குகள் விவரம்:
அதிமுக பொதுச் செயலாளர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.ஆனந்த் உள்ளிட்ட 22 வேடாபளர்கள் போட்டியிட்டனர்.
மொத்த வாக்காளர்கள் - 2,20,362
பதிவான மொத்த ஓட்டு - 1,78,823
ஆண்கள் - 89,855
பெண்கள் - 88,967
திருநங்கை - 1
சதவீதம் - 80.93
கொளத்தூரில் பதிவான வாக்குகள் விவரம்:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் மற்றும் 25 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
மொத்த வாக்காளர்கள் - 2,07,924
பதிவான மொத்த ஓட்டு - 1,41,906
ஆண்கள் - 72,314
பெண்கள் - 69,592
சதவீதம் - 68.25
ரிஷிவந்தியம் தொகுதியில் பதிவான வாக்குகள் விவரம்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜும் மற்றும் 8 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
மொத்த வாக்காளர்கள் - 2,06,725
பதிவான மொத்த ஓட்டு - 1,71,067
ஆண்கள் - 79,296
பெண்கள் - 91,771
சதவீதம் - 82.75
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications