இன்போஸிஸ் பங்குகள் விலை மேலும் சரிந்தது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்றும் இன்போஸிஸ் பங்குகள் விலை சரிவுக்குள்ளாகின.
இன்போஸிஸ் நிறுவனத்தில் நடக்கும் நிர்வாக மாறுதல்கள் மற்றும் கடந்த காலாண்டில் லாபம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பங்குகள் விலை சரிந்தன.
வெள்ளிக்கிழமை மட்டும் 7 முதல் 8 சதவீதம் வரை இன்போஸிஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
இன்று திங்கள் கிழமை வர்த்தகம் ஆரம்பித்த சிறிது நேரத்துக்குள் இன்போஸிஸ் பங்குகள் விலை சரியத் துவங்கின. இன்று மேலும் 4 சதவீதம் குறைந்து விற்பனையாகின பங்குகள்.
இதனால் இன்போஸிஸ் பங்குகளின் விலையை ரூ 4050லிருந்து ரூ 3400ஐ குறைத்து நிர்ணயித்தது கிரெடிட் சூஸே நிறுவனம். கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் இன்போஸிஸ் பங்கு வலிலையாக ரூ 3520ஆக நிர்ணயித்தது.












Click it and Unblock the Notifications