கேரளாவில் 7 மணி நேரத்தில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை: 2010-11-ல் ரூ.6, 730 கோடிக்கு விற்பனை
திருவனந்தபுரம்: கேரளாவில் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வெறும் 7 மணி நேரத்தில் ரூ. 21 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
கேரளாவில் கடந்த 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 11-ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தல் காரணமாக 11-ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 2 நாட்களுக்கு கேரளாவில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் மது பிரியர்கள் 11-ம் தேதி காலையிலேயே மது கடைகள் முன்பு குவிந்ததால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கடைகள் காலை 10 மணிக்குதான் திறக்கப்படும். ஆனால் காலை 8 மணிக்கே கடைகள் முன்பு நீண்ட வரி்சை காணப்பட்டது. அன்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 2010-11 நிதியாண்டில் மட்டும் கேரளாவில் ரூ.6 ஆயிரத்து 730 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.1130 கோடி அதிகம் ஆகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications