அருணாசலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர்.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியிலிருந்து பவன் ஹான்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று 18 பயணிகள், 2 விமானிகள், 3 சிப்பந்திகளுடன் அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் நகருக்குக் கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் தினமும் இந்த இரு நகர்களுக்கு இடையே இயக்கப்படுவது வழக்கம்.
பிற்பகல் 1.15 மணியளவில் மேற்கு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் நகரின் ஹெலிபேட் அருகே சென்றபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. 15 மீட்டர் உயரத்தில் இருந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.
இதில் இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு இமயமலைத் தொடரில் 11,000 அடி உயரத்தில் உள்ளது தவாங். சீன எல்லையில் உள்ள இந்தப் பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் தரை இறங்கிய விமானத்தின் டயர் வெடித்தது:
இதற்கிடையே ஹைதராபாத்திலி்ருந்து சென்னைக்கு 95 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வந்தது. காலை 11 மணிக்கு அந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடு பாதையில் வேகமாக சென்று இறங்கியபின் விமானம் நிறுத்தப்படும் இடம் நோக்கி திரும்பியது.
அப்போது விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. உடனே விமானி விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications